அந்த பிஞ்சு குழந்தை அளித்த பதில் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. "கட்டின மனைவியையே காட்டுக்கு அனுப்பி கஷ்டப்படுத்திய இராமன், இராவணனிடமிருந்து மீட்டு வந்த மனைவியையே சந்தேகப்பட்டு தீக்குளிக்க கூறிய இராமன், எனக்கு வேண்டாம் அம்மா. தன் சகோதரிக்காக அவதார புருஷனையே எதிர்த்து தன் உயிரை இழந்த இராவணன் தான் வேண்டும்."