எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வு, அமைதியாக முடிந்து இருக்க வேண்டிய நிகழ்வு, அசிங்கமாகி முடிந்து இருப்பது கூகுள் ரசிகனாக எனக்கு மிக வருத்தம். கூகுள்+ என்ற சமூகத்தளம் இருப்பது கூட இன்னும் பலருக்குத் தெரியாது, தெரிந்தாலும் அதைப் பயன்படுத்துவது கிடையாது என்பது அதை விடச் சோகம். ஃபேஸ்புக் Killer என்று வர்ணிக்கப்பட்டு 2011 ல் கூகுளால் துவங்கப்பட்ட கூகுள்+ இப்படிப் பரிதாபமான நிலையை அடைந்தது வருத்தமே! 2015 ம் ஆண்டு முதல் கூகுள்+ ல் இருந்த ஒரு Bug …
Read More