வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்து இருக்க வேண்டும் என்று “வரலாற்று சிறப்புமிக்க” அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பொதுமக்கள் பட்ட இன்னல்கள் சொல்லி மாளாது. சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில்.. “Digi Locker” தளத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம் இணைத்து இருந்தால், அதையே அதிகாரப்பூர்வமாகக் காட்டலாம், அசல் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை“ என்று மாநில அரசுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது. …